இதோ இன்னுமொரு ரமலான்.......
இதோ இன்னுமொரு ரஹ்மத்.............
பிறை கண்டு கொண்ட பேரானந்தம்.............
அல்லாஹ்வின் அட்சய பாத்திரம்
இஸ்லாத்தின் நான்காம் தூண்
இஸ்லாமியர்களின் ஆரோக்கிய தேன்.......
சொர்கத்தின் முகவரி....
ரய்யான் கதவை கடக்கும் ரகசியம்
ஏற்றுக்கொள்ளப்பட்ட நோன்பாளிகளுக்கு
அல்லாஹ் அளித்த அருட்கொடை..........
ஆயிரம் ஆயிரம் முறை கேட்டாலும்
இன்னும் அதிசயமாகவே தோன்றும்
லைலத்துல் கத்ர் இரவும் அதன் ஆயிரம் மாத நன்மைகளும்...
இருளகற்றும் இறைமறை
திறக்கப்பட்ட சொர்க்கம்.........
மூடப்பட்ட நரகம்...........
முடக்கப்பட்ட சைத்தான்
கஸ்தூரி மணம்..
வணக்கமாகும் உறக்கம்..........
ஹஜ்ஜாகும் உம்ரா...........
நன்மைகள்....
பெருகும் ஒன்றுக்கான பத்துக்கள்..........
கேட்டதும் கேட்டுக்கொண்டே இருப்பதுமான
ரமலான் குறித்த ஹதீஸ்களின் தொகுப்புகள்
சொல்லிவிடும் -இன்னும் மிச்சமிருக்கும்
சொர்க்கத்திற்கும் நமக்குமான தூரத்தை.................
நீண்டு விரிந்து கிடக்கிறது
அமல்கள் குறித்த கேள்விகளும் - அதன்
பயன்களை அடையும் தூரங்களும்.............
நோன்பிற்கும் பட்டினிக்குமான இடைவெளி
வணக்கங்களால் மட்டுமே நிரப்படுகிறது.........
கொடுத்தல் என்பதின் புரிதலின் குறைகள்
எஜமானர்களின் வீட்டின் முன் நீளும்
ஏழைகளின் வரிசைகளில்
நிறைந்து கிடக்கிறது.
சகோதர சண்டைகளுடனே
லைலதுல் கத்ரின் தேடல்.....
புரிந்தும் புரிய மறுக்கும் தொடரும்
மனித முரண்களின் தொடர்..........
விடியல் சொல்லிவிடும் ஆயுளின்
நிச்சயத்தை...........
பாவ மன்னிப்பிற்காய்
படைத்தவன் கொடுத்த பாக்கியம்.........
இந்த நிமிடத்தின் நிஜத்திலும்
இருப்பின் நிச்சயத்திலும்
ரமலானை வரவேற்பதோடு............
மிச்ச மிருக்கும் துஆக்களை
மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் மனது............
காலராவிலும் கான்செரிலும்
காணமல் போனது - எங்கள்
மருத்துவத்தின் மகத்துவம்................
உன்னிடம் சரணடைவது ஒன்றே உத்தமம்..............
காப்பாற்று................ கதறும் குரல்களை காதிலேற்று............
குறைந்த வணக்கங்களோடு
அருகதையற்ற விண்ணப்பம் .....
இருப்பினும்
கருணையாளனே.................
குறைகொண்ட வணக்கங்களை
நிறையாக்க- ரமலான் எனும் ரஹ்மத்
இறக்கி ரசித்தவனே...............
நோயில்லா சந்ததிகள் கொடு.........
உயிர் கொண்டு போகும் நோய்கள் தவிர்........
தாங்கும் சக்தி கொடு.......... தடுக்கும் மருந்து கொடு........
மன்னிக்கப்பட்ட பாவங்கள்..
மீண்டும் படராத மனம் கொடு............
ஜக்காத் கொடுக்க ஏழைகள் தேடும் இஸ்லாமியர்கள்..........
இம்மையில் நோன்பு திறக்கும் போது குளிர்ச்சி
மறுமையில் உன்னை சந்திக்கும்போது மலர்ச்சி
இவையாவும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட துஆவாய் இப்போதே வேண்டும்..........
அத்துடன்...... இம்மையில்
இனிவரும் பெருநாளையாவது - என்
பால்ய தோழனோடு கொண்டாடும் பாக்கியம் வேண்டும்.........
வரங்கள் கொண்டு வரும் ரமலானே வருக...............
உலக முஸ்லிம்களின் - ஈருலக
வாழ்க்கை முழுதும் வசந்தங்கள் தருக.....................